மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் செய்தல், திருக்குடமுழுக்குகள் செய்தல், திருத்தேர் புதுப்பித்தல், திருக்குளங்கள் புனரமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் உபயதாரர்கள் பங்களிப்புடன் திருக்கோயில்களில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் இன்று (24.8.2022) சென்னை, கந்தகோட்டம், அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவிலுக்கு சென்னை, கண் மருத்துவர் டாக்டர் பி. எஸ். முருகன் குடும்பத்தினர் ரூ. 4,82,524/- மதிப்பீட்டிலான 6,906 கிராம் எடை கொண்ட வெள்ளித் தொட்டில் மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டிலான 6 கிலோ எடை கொண்ட பாலமுருகன் வெண்கல திருவுருவ சிலை ஆகியவை காணிக்கையாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) திரு. இரா. கண்ணன், இஆப, சென்னை மண்டல இணை ஆணையர் திரு. ந. தனபால் துணை ஆணையர் திருமதி கவேநிதா, செயல் அலுவலர் திரு. கொளஞ்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்