150 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (21.06.2022) புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவில் வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.
​தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் அருள்மிகு ஈஸ்வரி பத்ரகாளியம்மன் ஈசன் தங்கு, திருக்கோயில், பத்மநாபநல்லூர் அருள்மிகு பத்மநாபநங்கையம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் அருள்மிகு துர்கை அம்மன் திருக்கோயில், கொண்டாநகரம் அருள்மிகு முப்பிடாதியம்மன் திருக்கோயில், அருள்மிகு தங்கம்மன் மற்றும் பனையடி மாடசாமி திருக்கோயில், தருமபுரி மாவட்டம், கோட்டை பைரவஅள்ளி அருள்மிகு சாக்க நாச்சியம்மன் திருக்கோயில், கிருஷ்ணாபுரம் கிராமம் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், மோட்டுப்பட்டி அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில், புழுதிகரை, அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், சேலம் மாவட்டம், ஓமலூர் நகர், அருள்மிகு தர்மராஜ் திரௌபதியம்மன் திருக்கோயில், மூக்கனூர், அருள்மிகு சென்றாய பெருமாள் திருக்கோயில், கனககிரி, அருள்மிகு வேலப்பன் மாரியம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், கோவிலூர் , அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், வேம்பன்பட்டி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நெப்புகை, அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில் உட்பட 150 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திருக்கோயில்களில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.
​தமிழ்நாட்டில் 1000 மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு புராதான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரித்தல் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
​இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் திரு.ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் திரு.கோவிந்தராஜ பட்டர், திரு.ஆனந்த சயன பட்டாச்சாரியர்,திரு.கே.சந்திரசேகரபட்டர், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் திரு.கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் முனைவர் முனைவர் சீ.வசந்தி, திரு. சத்தியமூர்த்தி, திரு.இராமமூர்த்தி, கல்வெட்டு படிமங்கள் நிபுணர்கள் (ம) நுண்கலை நிபுணர் திரு.இரா.சிவானந்தம், உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு : இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை-34.

Leave a Reply

Your email address will not be published.