வேல்ஸ் பல்கலைக்கழ12 வது பட்டமளிப்பு விழா - ஆளுநர் பங்கேற்பு.

சென்னை பல்லாவரம் “வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்” 12 வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலை வளாகத்தில் உள்ள “வேலன் அரங்கில்” நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்றவேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை & இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அனுராக் தாகூர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.