பிறந்தநாள் பலன்
நேர்மையான நடவடிக்கைகளால் உயர்ந்த சிகரங்களைத் தொடும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். எதிர்ப்புகள் அகலும். அரசியல்துறையினருக்கு தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்யம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்.
பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.