யோகா செய்யும்போது இந்த தவறு மட்டும் செய்யாதீர்கள்

நம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் யோகா பயிற்சி கை கொடுக்கும் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்த பின்னால் தினந்தோறும் அந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? யோகா பயிற்சிகள் பார்ப்பதற்கு எளிமையானதாக தோன்றினாலும், உங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை நீங்கள் செய்யக் கூடும்.

அன்றாடம் யோகா செய்வது என்று நீங்கள் முடிவு செய்து விட்டால், கட்டாயம் பின்வரும் விதிமுறைகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். யோகா என்பது போகிற போக்கில் செய்து விட்டு போகின்ற விஷயம் அல்ல. முறையான விதிமுறைகளின் படி அதைச் செய்ய வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளில் யோகா கற்றுக் கொள்ளும்போது கவனம் தேவை

முன்பெல்லாம் ஜிம் அல்லது ஏதேனும் பொது இடங்களில் தான் யோகா வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால், கொரோனா வருகையின் காரணமாக அதுபோன்ற வகுப்புகள் மட்டுமல்லாமல் ஆன்லைன் வழியாகவும் யோகா பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மக்கள் பலர் தங்கள் வீட்டில் லேப்டாப் ஒன்றை தரையில் வைத்து விட்டு, அதில் பயிற்சியாளர் கூறும் விதிமுறைகளுக்கு ஏற்ப யோக பயிற்சியை செய்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் பயிற்சியாளர் என்ன சொல்கிறார் என்பதை தெளிவாகக் கேட்டுக் கொள்ளும் பொருட்டு, பயிற்சிக்கு இடையே தலையை தூக்கி லேப்டாப் கவனிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது முற்றிலும் தவறான விஷயம் ஆகும்.

யோகா என்பது மனம் சம்பந்தப்பட்டது என்பதோடு மட்டுமல்லாமல் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுடன் தொடர்புடையது. ஆகவே, யோகா செய்யும் சமயத்தில் திடீரென்று தலையை மேல் நோக்கி தூக்குவதால் உங்களுக்கு தசை பிடிப்பு, எலும்பு வலி போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு… உடல் எடையை சீக்கிரமே குறைக்க சிம்பிள் டிப்ஸ்..!

இறுக்கமான ஆடைகள் கூடாது

யோக பயிற்சிகளின் போது உடல் உறுப்புகள் வெகு இயல்பாக அசைக்கப்பட வேண்டும். மிக இறுக்கமான உடைகளை நீங்கள் அணிந்தால் தேவைக்கு ஏற்றபடி உடலை நீங்கள் அசைக்க முடியாது. ஆகவே, இறுக்கமற்ற உடைகளை அணியவும்.

அவசரம் காட்டக் கூடாது

யோகாவை கடமைக்கு செய்கிறேன் என்ற பெயரில், விரைவாக செய்து முடித்துவிட வேண்டும் என்று நினைக்க கூடாது. மூச்சுப்பயிற்சியுடன் தொடர்புடைய இந்தக் கலைப் பயிற்சியை செய்வதற்கு போதுமான கால இடைவெளி அளவுகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அதிகமாக செய்யக் கூடாது

யோகாவில் கடினமான சில ஆசனங்களை செய்வதற்கு நாள்பட்ட பயிற்சியும், பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்களும் அவசியமானதாகும். ஆனால், ஒரே நாளில் யோகாபயிற்சியை செய்துவிட வேண்டும் என்ற நோக்கில், உடல் ஒத்துழைக்காத ஒரு பயிற்சியை செய்ய நினைக்காதீர்கள். அதிகமான அழுத்தத்துடன் முயற்சி செய்தால் உடலில் காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published.