Category: செய்திச்சுருக்கம்

காவல் மரணங்கள் குறையவில்லை என்பது கூடுதல் சோகம்

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையின் சித்திரவதையால் உயிரிழந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. நீதிக்காகக் காத்திருக்கிறோம். காவல் மரணங்களும் குறையவில்லை என்பது கூடுதல் சோகம்

அ.தி.மு.க பொதுக்குழு 23-ந்தேதி நடத்த தடை இல்லை – உயர்நீதிமன்றம்.

போலீஸ் பாதுகாப்பு கோரி டி.ஜி.பியை நாடலாம்.திருவள்ளூர் மாவட்டக் கழக செயலாளர் பெஞ்சமின் வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.பிரச்சினை என்றால் போலீசை நாடும்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு அறிவுரை.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் தங்கும் வசதி திறப்பு.

சென்னை, தலைமைச் செயலகத்தில், நாளை (22.06.2022) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் தங்கும் வசதியுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களைத் திறந்து வைக்கிறார்கள்.

‘ஆர்டர்லி’ காவலர்களை திரும்பப்பெற வேண்டும் – கமல் வரவேற்பு.

காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் `ஆர்டர்லி’ என்ற பெயரில் பணிபுரியும் காவலர்களை திரும்பப்பெற வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தக்கது. படித்து, பயிற்சி பெற்ற காவலர்களை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவது குற்றம் என்றும், இவ்வாறு பயன்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்ய…

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம் வாளாடி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு நான் உறுதிமொழி கூற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.