தி.மு.க. வை யாராலும் அழிக்க முடியாது - முக ஸ்டாலின்.

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேத்தி டாக்டர் அ.தீப்தி – மு.விஷ்வக்சேனா திருமணம் இன்று திருவாண்மியூரில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்., இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்ம வீட்டு திருமணம் நடப்பதை எண்ணி நாமெல்லாம் வாழ்த்திக் கொண்டு இருக்கிறோம். இன்னொரு திருமண மண்டபத்தில் நம்மை அழிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள். தி.மு.க. அழிந்த வரலாறே கிடையாது.

இது நம்ம வீட்டு திருமணம் ஒரு சீர்திருத்த, சுயமரியாதை, திராவிட மாடலில் நடைபெறக்கூடிய திருமண விழாவாக இந்த திருமண விழா நடைப்பெறுகிறத்து. நான் உடல் நலிவுற்று சற்று ஓய்வில் இருந்தாலும் இந்த திருமணத்துக்கு எப்படியும் வர வேண்டும் என்ற அந்த நிலையில் வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அடுத்து இயற்கை சூழல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கூட்டம் கோட்டையில் நடைபெறுகிறது. அங்கு போகிறேன். மணமக்களை வாழ்க என்று வாழ்த்தி பாவேந்தர் பாரதிதாசன் கூறிய வீட்டிற்கு விளக்காக நாட்டிற்கு தொண்டர்களாக இருக்க வேண்டும் என்று மணமக்களை வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published.