காரணீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்னை, சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 8327 சதுர அடி பரப்பளவு சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை, சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமாக 8327 சதுர அடி பரப்பளவு மனைகள் கோடம்பாக்கம் ரோடு, பஜார் ரோடு, குளக்கரை ரோடு, ஜோன்ஸ் ரோடு, கே.பி.கோயில் தெரு ஆகியவற்றில் உள்ளது. இதனை 7 நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவர்கள் வாடகை ஏதும் செலுத்தாமல் 18 நபர்களுக்கு வணிகமாக உள்வாடகைக்கு விட்டிருந்தார்கள். இவர்கள் மீது சென்னை – 2 மண்டல இணை ஆணையர் அவர்கள் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு – 78 ன் படி வழக்கு தொடர்ந்து அதன் உத்தரவுப்படி இன்று (03.08.2022) காவல்துறை உதவியுடன் வருவாய் துறையினரின் முன்னிலையில் அச்சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.11 கோடி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.