மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (23.08.2022) தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 37 வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி, அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், மேட்டூர், அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், மதுரை மாவட்டம், விளாங்குடி, அருள்மிகு பாரமுருகன் திருக்கோயில், பொறியாளர்நகர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர், அருள்மிகு அன்னதான விநாயகர் மற்றும் உடைமரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், கீழமணலி, அருள்மிகு லெட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில், தெற்குவீதி, அருள்மிகு பிறவி நாச்சியார் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம், கிழாய், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர், அருள்மிகு பிரம்மசிரக்கண்டிஸ்வரர் திருக்கோயில், பாபநாசம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம், அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில், உடுமலை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், கரூர் மாவட்டம், புலியூர், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் உட்பட 86 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இக்குழு பரிந்துரையின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.
தமிழ்நாட்டில் 1000 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிக்கும் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் இணை ஆணையர் (திருப்பணி) திரு.பொன். ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் திரு.கோவிந்தராஜ பட்டர், திரு.ஆனந்த சயன பட்டாச்சாரியர், திரு.கே.சந்திரசேகர பட்டர், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் திரு.கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் முனைவர் சீ.வசந்தி, திரு.இராமமூர்த்தி, முனைவர் கே.தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை வடிவமைப்பாளர் முனைவர் டி.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.