மக்கள் நல அறக்கட்டளை

ஒட்டன்சத்திரம் வடகாடு ஊராட்சி பெத்தேல்புரத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி திரு. ராஜேந்திரன் (வயது 32) (த/பெ. ரங்கசாமி) அவர்களுக்கு ஒட்டன்சத்திரம் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக ₹ 10,000 (பத்தாயிரம்) மதிப்பில் உடைந்து விழும் தருவாயில் இருந்த வீட்டின் முன் பகுதியினை புதுப்பிக்கும் பணிகள் செய்யப்பட்டது.

இவரது கோரிக்கையினை ஏற்று கள ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்த வீட்டின் முன்பகுதி ஓடுகள் மற்றும் மரத்திலான இணைப்புகளை அகற்றி தரமான ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் மற்றும் கம்பிகள் உதவியுடன் மழை காலத்திற்கு முன்பாக சீரமைக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரத்தில் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் மக்கள் நல அறக்கட்டளையின் தொடர் முயற்சியின் காரணமாக வயதான பெற்றோருடன் வசித்து வரும் இவருக்கு உதவியானது சமூக ஆர்வலர்களின் உதவியுடன் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் நல அறக்கடளை நிர்வாகி திரு. பெ. ரகுபதி மற்றும் அறக்கடளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உதவியுனை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி ராஜேந்திரன் 75% கால்கள் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றத்திறனாளியான ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்தனர்.

இவருக்கு ஏற்கனவே மக்கள் அறக்கட்டளை உதவியுடன் ₹18,000 செலவில் 4 வெள்ளாட்டுக் குட்டிகள் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.