ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

ஒட்டன்சத்திரம் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளி முதியவரின் வாழ்வாதாரத்திற்காக ₹10,000 மதிப்பில் வெண்கலத்திலான இஸ்திரி பெட்டி மற்றும் இஸ்திரியில் பயன்படுத்தும் கரியும் 19.06.2022 அன்று வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, ஐயம்பாளையத்தை சேர்ந்த 65 வயதுடைய, போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட திருமணமாகாத மாற்றுத்திறனாளியான திரு. சக்திவேல், இவர் தனது கண்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான சகோதரியுடன் வசித்து வருகிறார்.

சிறிய வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழியேதுமின்றி, ஒட்டன்சத்திரம் மக்கள் நல அறக்கட்டளையிடம் உதவி செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டதின் பேரில், உதவி செய்யும் நல்லுள்ளங்கள் வழங்கிய பணத்தின் உதவியுடன் இச்சிறு உதவி இவர்களுக்கு செய்யப்பட்டது.

இது சிறு உதவியாயினும், இவ்வுதவியின் காரணமாக அவர்களின் அன்றாடத்தேவைகளுக்காக எவரையும் எதிர்பாராமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.

மகிழ்வோம்! மகிழ்விப்போம்!!

தொடர்புக்கு: People Welfare Trust – மக்கள் நல அறக்கட்டளை – Oddanchatram

📞 +91 6382 223 851

Leave a Reply

Your email address will not be published.